Pages

Saturday 20 February 2016

விஷக்கடி, நாய்க்கடி விஷம் குறைய பாட்டி வைத்தியம்

நாய்க்கடி விஷம் குறைய:


  • கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும் இடித்து கடிவாயில் வைத்து 3 நாட்கள் கட்டினால், நாய்க்கடி விஷம் குறையும்.

  • ஊமத்தை இலைகளை எடுத்து, அரைத்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி, நாய் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் நாய்க்கடி விஷம் குறையும்.

விஷக்கடி, அரிப்பு, வலி குறைய:


  • கம்பளி பூச்சி கடித்த இடத்தில், முருங்கை இலையை அரைத்து பற்று போட, அரிப்பு குறையும்.

  • சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து, தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.

  • கரப்பான்பூச்சி கடித்த இடத்தில், வேப்பிலையும், மஞ்சளையும் அரைத்துப் பற்றுப் போட்டால் வலி குறையும்.

  • நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால், சிறிய தேள் (வீடுகளில் காணப்படும் தேள்) கடி விஷம் நீங்கும்.

  • கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து, மோருடன் கலந்து சாபிட்டால், எந்த விஷக்கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.

  • எலுமிச்சம்பழ விதையுடன், சிறிது உப்பையும் வைத்து அரைத்து, தண்ணீரில் கலந்து குடிக்க, தேளின் விஷம் குறையும்.

  • காதில் பூச்சிகள் நுழைந்து விடும் பொது, இரண்டு துளி வெங்காயச் சாற்றை விட்டால், பூச்சிகள் வெளியே வந்துவிடும்.

  • விஷம் உள்ள வீட்டுப் பூசிகள் கடித்துவிட்டால், ஆடா தொடையை சுத்தம் செய்து அரைத்து, சிறிதளவு வெந்நீரில் வேகவைத்து கலந்து குடிக்க விஷம் முறியும்.

  • தென்னை மரக்குருத்தோலையை நெருப்பில் விட்டு, தூள் செய்து, பின்பு தேங்காய் எண்ணெய் குழப்பி, செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வர செருப்பு கடியினால் ஏற்பட்ட புண் குணமாகும்.

  • குப்பைமேனி இலையை மைய அரைத்து, எலி கடித்த கடிவாயில் பத்து போட, எலிக் கடியின் விஷம் குறையும்.

  • பூரான் கடித்த இடத்தில் குப்பைமேனி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பத்து போட விஷக்கடி குணமாகும்.

  • அவுரி வேர், அறுகம்புல், மிளகு மூன்றையும் சேர்த்து அரைத்து, பூரான் கடித்த இடத்தில் போட்டால் வலி குறையும்.

  • மாங்காய் பறிக்கும் போது, அதன் காம்பிலிருந்து வழியும் பாலை தேனீ கொட்டிய இடத்தில் தடவினால், உடனடி நிவாரணமளிக்கும்.