Pages

Thursday 11 February 2016

இதயம் பலம் பெற, நெஞ்சு வலி வராமல் தடுக்க பாட்டி வைத்தியம்

இதயம் பலம் பெற:


  • செம்பருத்தி பூவை தண்ணீர், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.

  • செம்பருத்தி பூவை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி, தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்.

  • அத்திப்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும். மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் குறையும்.

நெஞ்சு வலி வராமல் தடுக்க:


  • வெங்காயத்தையும், கேரட்டையும் அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொண்டால், நெஞ்சு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

  • துளசி விதை, பன்னீர், சர்க்கரை மூன்றையும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒன்றாக கலக்கி, நாளொன்றிற்கு இரண்டு வேளை சாப்பிட, மார்பு வலி குணமாகும்.

  • கிச்மஸ் பழம், கொத்தமல்லியை இரண்டையும் தண்ணீரில் சுட வைத்து அரைத்து, வடிகட்டி, காலையில் குடித்தால் மார்பு படபடப்பு, வலி குணமாகும்.

  • 2 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சளை ஒரு வெற்றிலையில் வைத்து தினமும் 2 வேளை மென்று சாப்பிட்டு வந்தால், மார்பு வலி குறையும்.

  • கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

  • பேரிச்சம் பழம் நான்கை முதல் நாள் மதியம் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.