Pages

Saturday 20 February 2016

குடல் புண், வயிற்று பூச்சிகள் மறைய பாட்டி வைத்தியம்

குடல் புண் குறைய:


  • தினமும் மணத்தக்காளி கீரையை துவரம் செய்து மதிய உணவுடன் சாப்பிட்டு வர குடல் புண் குறையும்.

  • நாம் வீடுகளில் வழக்கமாக வைக்கும் ரசத்தில், புளிக்கு பதிலாக வில்வ மரத்தின் பூக்களை பயன்படுத்தி ரசம் வைத்து சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.

வயிற்று பூச்சிகள் மறைய:


  • காலை உணவு அருந்துவதற்கு முன், வில்வ பழத்தின் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட, குடலில் கசடு தாங்காமல், குடல் சுத்தமாகும்.

  • மாங்கொட்டைப் பருப்பை நன்றாக காய வைத்து, தூள் செய்து தேனில் குழைத்து சாப்பிட, வயிற்றுப் பூச்சிகள் மறையும்.

  • உணவில் சுண்டைக்காயை சேர்த்து வந்தால், வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியை தூண்டும்.

ஜீரணசக்தி அதிகரிக்க:


  • ஆளிவிதையை அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் உணவு செரிக்காமை குணமாகும்.

  • கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீர் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க ஜீரணசக்தி அதிகரிக்கும்.

  • சதகுப்பை விதையை கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க, குழந்தைகளின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.