Pages

Friday 12 February 2016

நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்

நினைவாற்றல் அதிகரிக்க:


  • தூதுவளை, வல்லாரை, கறிவேப்பிலை மூன்றையும் போடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

  • பப்பாளி பழத்தை தினமும், சிறு அளவு மட்டும் சாப்பிட்டு வந்தால் மறதி பொய் நியாபக சக்தி பெருகும்.

  • மிளகை இடித்து பொடி செய்து, தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கும்.

  • வல்லாரை கீரையை தினமும் துவரம் (பொறியல்) செய்து சாப்பிட, நினைவாற்றல் பெருகும்.

  • வல்லாரை, வசம்பு இரண்டையும் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும்.

  • தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.

  • பூசணிக்காய் சாறில், ஒரு கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளைச் சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:


  • அறுகம்புல் சாறை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • ஒரு செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.