Pages

Friday 12 February 2016

முகப்பரு, கரும்புள்ளிகள் குறைய; சுருக்கங்கள் விலக, முகம் பொலிவு பெற பாட்டி வைத்தியம்

முகப்பரு குறைய:


  • வெந்தயக்கீரையை அரைத்து, தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.

  • சந்தனத்தை பன்னீருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.

  • சிறிது படிகாரத்தை நீரில் கரைத்து முகம் கழுவி வந்தால், முகப்பருவினால் தோன்றிய வடுக்கள் மாறும்.

  • வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி, பருக்கள் மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

  • முட்டைகோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பருக்கள் மறையும்.

  • அருகம்புல் பொடி, குப்பைமேனி பொடி இரண்டையும் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.

கரும்புள்ளிகள் குறைய:


  • தக்காளிச்சாறுடன் தயிர் கலந்து, தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.

  • பப்பாளிச் சாறுடன், தேன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவினால் முகத்தின் கருமை நிறம் குறையும்.

  • உருளைக்கிழங்குச் சாறு, தக்காளிச் சாறு, பாப்பாளிச் சாறு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி, முகம் கழுவினால் கரும்புள்ளிகள் குறையும்.

  • வெள்ளரிக்காயை அரைத்து கரும்புள்ளி மீது தடவி, நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகம் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

முகச் சுருக்கங்கள் விலக:


  • கசகசாவை அரை கப் எருமை தயிரில் அரைத்து, தினமும் இரவு படுக்க போகும் முன் முகத்தில் தடவி வந்தால், சுருக்கங்கள் விலகி முகம் பளபளப்புடன் தோற்றமளிக்கும்.

  • பாதாம் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகச்சுருக்கம் மறையும்.

  • முட்டையின் வெள்ளைக்கரு, பால், மஞ்சள் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.

  • ஒரு டம்ளர் தண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க தோல் மிருதுவாக மாறும்.

  • கடலை மாவு, வெந்தயம் இவற்றை அடிக்கடி தேய்த்து முகம் கழுவி வந்தால் பருக்கள் நீங்கும். முகம் சொரசொரப்பு, முகம் எரிச்சல் நீங்கும்.

  • கடலை மாவு, எழுமிச்சை சாறு, பால் மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால், முகம் மிருதுவாக மாறும்.

  • கடுகை ஊறவைத்து அரைத்து, தினமும் கை முட்டியில் தடவி, 5 நிமிடம் ஊறவைத்து பின் கழுவிவர, கை முட்டியின் கருப்பு குறையும்.

முகம் பொலிவு பெற:


  • தினமும் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக மாறுவதோடு, முகமும் பொலிவு பெரும். தோல் சொரசொரப்பு விலகும்.

  • கோதுமை கஞ்சி, கீரை, பச்சை காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர, சருமம் நிறம் குறையாமல் இருக்கும்.

  • எலுமிச்சை சாறு, தேன், பால் மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.

  • பாலில் எலுமிச்சை சாறை கலந்து, தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

  • கஸ்தூரி மஞ்சள், பயத்த மாவு இரண்டையும் தயிருடன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

  • பாலுடன் ஓட்சை காய்ச்சி, ஆறிய பின் பன்னீருடன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

  • பாலுடன் சந்தனம் கலந்து, தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.

  • வெள்ளரிச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

  • புதினா சாறு, துளசி சாறு, இரண்டையும் கலந்து, தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.

  • வெள்ளரியை சாறெடுத்து, பாலாடையுடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.