Pages

Tuesday 16 February 2016

அசதி, கை கால் வலி குணமாக பாட்டி வைத்தியம்

உடல் சோர்வு நீங்க:


  • குளிர்ந்த நீரில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து, அதிகாலை வேளையில், சில நாட்கள் தொடர்ந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.

  • முருங்கைகீரையை காம்புடன் ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் அசதி குறையும்.

  • பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.

  • ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன், மிளதுத்தூள் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் சோர்வு குறையும்.

  • கம்பை கூழாக்கி அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடையலாம்.

  • உலர்ந்த திர்ட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம், முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

  • பேரிச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, ஊறிய பேரிச்சம் பழத்தையும், அந்த தண்ணீரையும் குடிக்க சோர்வு குறையும்.

  • அகத்திக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெற்று சுறுசுறுப்புடன் இருக்கும்.

கை, கால் வலி குணமாக:


  • சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து குடித்துவந்தால், கை, கால் வலி குணமாகும்.

  • பெருங்காயத்தை நல்லெண்ணெயில் சுட வைத்து, இளம் சூட்டுடன் காலில் தடவினால் கால்வலி குறையும்.

  • சுக்கு, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து, 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி, நன்றாக ஆற வைத்து குடித்து வர, கை, கால் வலி போகும்.

  • முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து, பின்பு அதை நன்றாக மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.

  • வேப்ப எண்ணையுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து ஊற வைத்து உணர்வில்லா பாகத்தில் சூடு பறக்க தேய்த்து வர கை, கால் உணர்வு திரும்பும்.

  • நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கை, கால் வலி வராமலிருக்கும்.

  • அமுக்கிராங் கிழங்கை இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டியதும் எடுத்து பாட்டிலில் ஊற்றி தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

  • சுக்கு மற்றும் ஆவாரம்பட்டையை சம அளவு எடுத்து தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர கை, கால் வலி குணமாகும்.