Pages

Friday 15 July 2016

இருமல் குணமாக பாட்டி வைத்தியம்

  • எலுமிச்சம் பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை எரிச்சல் குணமாகும்.

  • எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் தூங்கும் முன்னும் குடித்தால் இருமல் குறையும்.

  • 1 கப் எலுமிச்சை பழச்சாறு, 3 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க, வரட்டு இருமல் குணமாகும்.

  • தினமும் இருமுறை அதிமதுரத்தின் சிறு துண்டை வாயில் போட்டு ஒதுக்கி கொண்டால் நெஞ்சு கமறல் உடன் நிற்கும்.

  • சிறிது பெருங்கயத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்த தண்ணீரை குடித்து வர இருமல் நிற்கும்.

  • சிறிதளவு துளசி இலையை எடுத்து அதை இடித்து சாறு எடுத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

  • கற்பூரவல்லி இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் இருமல் நீங்கும்.

  • நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதல்கள் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து சாப்பிட இருமல் குறையும்.

  • ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

  • உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

  • உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

  • திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.

  • சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதனுடன் பணங்கற்க்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.