Pages

Friday 12 February 2016

பல்வலி, வாய்ப்புண் குணமாக பாட்டி வைத்தியம்

வாய்ப்புண் குணமாக:


  • கசகசாவை தூளாக்கி, பசும் பாலில் கலந்து இரவு வேளையில், சாப்பிட்ட பின் குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

  • அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து, நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட, நாக்கில் உள்ள புண் குணமாகும்.

  • நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து, அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.

பல் வலி குணமாக:


  • துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி, அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.

  • சிறு துண்டு சுக்கை, வாயில் போட்டு மெல்ல பல்வலி குறையும்.

  • கடுக்காய் பொடியை, பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம், இரத்தம் கசிதல் ஆகியவை தீரும்.

  • புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, அதனுடன் கடுக்காய்தூள் சேர்த்து, நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல்வலி தீரும்.

  • உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து தினமும் பல் துலக்கி வர, பல்வலி குறையும்.

  • புங்க மர இலையை காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.

  • பெருங்காயப் பொடியை வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்து கொண்டால், சொத்தைப் பல்வலி நொடியில் பறந்துவிடும்.

  • பல்வலி ஏற்படும் போது, சிறிது மிளகுத் தூளில் கிராம்பு எண்ணைய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வர, பல்வலி குறையும்.

  • புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு மூன்றையும் கலந்து பல் துலக்கி வர, பல்வலி குறையும்.

  • மாவிலையை பொடி செய்து, பல் துலக்கி வந்தால் பற்கள் சுத்தமும், உறுதியும் ஆகும்.