Pages

Saturday 20 February 2016

உடல் எடை அதிகமாக, குறைய பாட்டி வைத்தியம்

உடல் எடை குறைய:


  • இஞ்சிச்சாற்றை கொதிக்க வைத்து, அதில் அதே அளவு தேன் ஊற்றி ஆற வைத்து, தினசரி உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் குறையும்.

  • முருங்கை இலைச்சாற்றை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு டீஸ்பூன் அளவு சாப்பிட, உடல் எடை குறையும்.

  • அவரை இலையை உலர்த்தி, இடித்துத் தூளாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

  • கரிசலாங்கண்ணி கீரையுடன், பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளையில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

  • பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  • பாதாம் பொடியை எடுத்து, அதில் சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

  • கரிசலாங்கன்னி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து, தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  • ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி, இடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  • சின்ன வேங்காயத்தை பசு நெய்யில் வதக்கி, அரைத்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், அடிவயிறு சதை குறையும்.

  • சோம்பு, கடுக்காய் தூள் இரண்டையும் சேர்த்து, மண் சட்டியில் தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி, சுத்தமான தேன் கலந்து குடித்து வர ஊளைச் சதை குறையும்.

  • முள்ளங்கியை துருவி, மேலாக சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து, உடல் பருமன் குறையும்.

உடல் எடை அதிகமாக:


  • பேரிச்சம் பழத்தை, பாலில் போட்டு காய்ச்சி, தினமும் இரவு தூங்கும் முன் குடிக்க உடல் எடை அதிகரிக்கும்.