Pages

Friday 12 February 2016

நரம்புதளர்ச்சி குணமாக பாட்டி வைத்தியம்

  • சூடான சாதத்துடன், அரைக்கீரையை துவரம் பருப்பு, நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

  • வசம்பை இடித்து தூளாக்கி, 2 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு சுவைத்து, வெந்நீர் குடித்தால் நரம்புதளர்ச்சி குணமாகும்.

  • செண்பகபூவை கசாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

  • எட்டி மரத்தின் இலைகளை பறித்து, வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து, அந்த நீரில் குளித்து வந்தால் நரம்பில் ஏற்படும் வலி குறையும்.

  • அமுக்கரா கிழங்கின் இலையை காய வைத்து, பொடி செய்து கற்கண்டு சேர்த்து, பாலில் கலந்து காலையில் குடிக்க நரம்பு தளர்ச்சி குறையும்.

  • வெள்ளை தாமரை இதழ்களை கசாயம் செய்து, பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாபிட்டால் கை நடுக்கம் குணமாகும்.

  • கற்கண்டுடன், நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சோம்பல், நரம்பு தளர்ச்சி குறையும்.

  • மாதுளம் பழச்சாறுடன், தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வந்தால், நரம்பு தளர்ச்சி குறையும்.

  • இலந்தை வேரை கஷாயம் செய்து, தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

  • சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து, அடிக்கடி உணவுடன் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.