Pages

Monday 15 February 2016

கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் குணமாக பாட்டி வைத்தியம்

கல்லீரல், மண்ணீரல் வியாதிகள் குணமாக:


  • கரிசலாங்கண்ணி கீரையை துவரம் செய்து, தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வர, கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

  • தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர, கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

  • கொள்ளுக்காய், வேளைச் செடி வேர், மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட, கல்லீரல் வீக்கம் குறையும்.

சிறுநீரக கோளாறுகள் குணமாக:


  • கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வர நீர்கடுப்பு குறையும்.

  • இரண்டு தேக்கரண்டி கீழாநெல்லி சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.

  • அண்ணாச்சி பழத்தை சாறு பிழிந்து, தினமும் ஒரு குவளை பருக சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

  • அறுகம்புல்லை நறுக்கி, நீர் விட்டு கொதிக்க வைத்து, அந்த நீருடன் பால், சர்க்கரை கலந்து குடித்து வர, சிறுநீர்ப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.