Pages

Monday 15 February 2016

தேமல், சொறி சிரங்கு, படை குணமாக பாட்டி வைத்தியம்

தேமல் குணமாக:


  • துளசி இலை, வெற்றிலை இரண்டையும் அரைத்து, தேமல் உள்ள இடத்தில் பூசினால், தேமலின் எரிச்சல் குணமாகும்.

  • மஞ்சளை இடித்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தேமலின் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.

சொறி சிரங்கு குறைய:


  • எட்டிமரம் பட்டையை நெய்யில் வறுத்து, அந்த நெய்யை சொறி சிரங்கு உள்ள இடத்தில் தினமும் தடவி வர சொறி சிரங்கு குறையும்.

  • கானா வாழை இலையை அரைத்து, உடலில் அரிப்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வர உடல் அரிப்பு குறையும்.

  • வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

  • சிறிதளவு வேப்பமர பட்டையை எடுத்து, அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு குளித்து வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

படை நீங்க:


  • முருங்கை இலை சாறுடன், சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப் படையின் மீது தடவினால், படை நீங்கும்.

  • எலுமிச்சம் பழத்தை உடல் முழுவதும் தேய்த்து, கொஞ்ச நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

  • முருங்கைக் கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தப்பட்ட தோந்தரவுகளை தவிர்க்கலாம்.