Pages

Tuesday 16 February 2016

நரை முடி கறுப்பாக மாற, முடி உதிர்வு குறைய, வழுக்கை மறைய பாட்டி வைத்தியம்

நரை முடி கறுப்பாக மாற:


  • புதினா கீரை, இஞ்சி, எலுமிச்சை சாறு இவை மூன்றையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால், இளநரை மாறி முடி கறுப்பாகும்.

  • காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி, தேங்காய் எண்ணையுடன் கொதிக்க வைத்து, குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் தலையில் தேய்தது குளித்து வந்தால், தலைமுடி கருமையாக வளரும்.

  • கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி மூன்றையும் அரைத்து சாறெடுத்து, தினமும் தலையில் தடவி வர நரை மாறும்.

  • நெல்லிக்காயை காய வைத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து குளித்து வர, முடி கறுப்பாக வளரும்.

  • அதிமதுரம், கசகசா, பால் சேர்த்து அரைத்து வாரம் 2 முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வர நரை முடி குறையும்.

  • அதிமதுரத்தை தண்ணீரில் ஊற வைத்து, அதில் பால் சேர்த்து அரைத்து வாரம் 1 முறை தலையில் தேய்த்து குளித்து வர முடியில் செம்பட்டை நிறம் மாறும்.

  • கசகசாவை ஊற வைத்து அரைத்து, வாரம் 2 முறை தலையில் தேய்த்து குளித்து வர, முடியின் செம்பட்டை நிறம் மாறும்.

முடி உதிர்வு குறைய, வழுக்கை மறைய:


  • இலந்தை மரத்தின் இலையை இடித்து சாறெடுத்து, அடிக்கடி தலையில் தடவி வர முடி வளரும்.

  • வெள்ளை பூண்டின் பல்லை மேல்பக்கமாக திருகி, அதில் வரும் நீரை அடிக்கடி தலையில் பூசி வந்தால் சொட்டை நீங்கும்.

  • நெல்லிக்காயை சாறெடுத்து, நல்லெண்ணையை சம அளவு கலந்து தலையில் தேய்த்து குளிக்க முடி உதிர்வு குறையும்.

  • சோயா விதையை அரைத்து தினமும் தலையில் தடவி வந்தால், முடி கொட்டுதல், வழுக்கை மறையும்.

  • வெந்தயத்தை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

  • வெந்தயத்தை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

  • சீதாப்பழவிதை பொடியோடு, கடலை மாவைக் கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிராது.

  • வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து, தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் முடி வளரும்.

  • கேரட், எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும் கலந்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, குளிப்பதற்கு முன் தலையில் தேய்க்க, முடி நன்றாக வளரும்.

  • கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து, சிறிய துண்டாக நறுக்கி, தேங்காய் எண்ணெய்யில் பொட்டு காய்ச்சி, தலைக்கு தடவி வர முடி வளரும்.

  • மருதாணியை அரைத்து தேங்காய் எண்ணெய், தேங்காய் பாலுடன் கலந்து வாரம் 1 முறை தலையில் தேய்த்து குளித்து வர, முடி மிருதுவாக மாறும்.