Pages

Friday 12 February 2016

பித்த மயக்கம், பித்தம் குறைய பாட்டி வைத்தியம்

பித்த மயக்கம் குறைய:


  • பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து, அந்த சாற்றை சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிக தாகம், பித்த மயக்கம் குறையும்.

  • அடிக்கடி மயக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காப்பி, தேனீர் இவற்றிற்கு பதிலாக, எழுமிச்சம் பழச்சாற்றை குடித்தால் நாளடைவில் மயக்கம் குறையும்.

பித்தம் குறைய:


  • அத்தி இலையை பிழிந்து சாறெடுத்து வெண்ணெய், தேன் கலந்து காலையில், வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.

  • வேப்பம் பூவை சிவக்க பொரித்து, அதனுடன் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.

  • ஒரு கையளவு வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து, காலை உணவிற்கு முன் உண்டால், பித்த சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

  • விளாம்பழம் கிடைக்கும் காலங்களில், தினமும் 1 விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்க முடியும்.

  • மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, பசியின்மை, தலைசுற்று ஆகிய வியாதிகள் நீங்கும்.

  • அண்ணாசிப்பழ வற்றல்களை பாலில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

  • நன்கு பழுத்த கொய்யாப் பழத்துடன், மிளகு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.