Pages

Friday 12 February 2016

தீப்புண் ஆற, தீப்புண் வடு மறைய; கட்டிகள், வேனற்கட்டி குறைய பாட்டி வைத்தியம்

கட்டிகள், வேனற்கட்டி குறைய:


  • எட்டிமரத்தின் இலையை மை போல அரைத்து, கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கட்டிகள் குறையும்.

  • முளைக்கட்டிய தானியங்கள், தக்காளி, ஸ்ட்ராபெரி, அத்திப்பழம் இவற்றை தினமும் உணவில் சேர்க்க, வேனற்கட்டி வராமல் தடுக்கலாம்.

தீப்புண் ஆற மற்றும் தீப்புண் வடு மறைய:


  • வாழைத்தண்டு சாறை எடுத்து, தீப்புண் பட்ட இடத்தில் அடிக்கடி உற்றி வர தீப்புண் ஆறும்.

  • வெப்பங்கொட்டையை நீர் விட்டு காய்ச்சி, அந்நீரை மத்தைக் கொண்டு சிலுப்பினால் நுரை உண்டாகும். பின் அந்நீரை தீப்புண் மீது பூச வடு மறையும்.

  • தூள் உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து, சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.