Pages

Tuesday 16 February 2016

பொடுகு, தலை அரித்தல், பேன் தொல்லை குறைய பாட்டி வைத்தியம்

பொடுகு, தலை அரித்தல் குறைய:


  • சிறிய வெங்காயத்தை மை போல அரைத்து, தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்து வர, தலை குளிர்ச்சி பெறும். பொடுகும் நீங்கும்.

  • செம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து, அடிக்கடி தலைக்கு தேய்த்து வர, தலை அரித்தல், தலை எரிச்சல் நீங்கும்.

  • வெந்தயம், வேப்பிலை, பயத்த மாவு மூன்றையும் சேர்த்து அரைத்து, தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு குறையும்.

  • வெந்தயத்தை ஊற வைத்து, அதனுடன் நெல்லிக்காயை சேர்த்து அரைத்து, வாரம் 1 முறை தலையில் தேய்த்து குளித்து வர, பொடுகு குறையும்.

  • கேரட் சாறு, எலுமிச்சை சாறு இவற்றை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி, தினமும் தலையில் தடவி வர பொடுகு குறையும்.

  • மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணையில் போட்டு காய வைத்து, 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர, மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

பேன் தொல்லை குறைய:


  • வெள்ளைப்பூண்டை அரைத்து, எழுமிச்சை பழச்சாற்றில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன் தொல்லை நீங்கும்.

  • 25 கிராம் வெந்தயத்தை பொடி செய்து, தயிரில் கலந்து தலையில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், பேன் தொல்லை குறையும்.