Pages

Friday 12 February 2016

பாத வெடிப்பு, பித்த வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்

  • மருதாணி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து, இரவில் காலில் தடவி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.

  • ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டையும் சம அளவு கலந்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் பூசினால் பாத வெடிப்பு குணமாகும்.

  • வெங்காயத்தை வதக்கி, பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு நீங்கும்.

  • தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.

  • மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் பாத எரிச்சல் குணமாகும்.