Pages

Friday 12 February 2016

கண் பிரச்சனைகள் குணமாக பாட்டி வைத்தியம்

  • கண்களில் எந்தவித நோய் தென்பட்டாலும், அன்னாசிபழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண் பிரச்சனைகள் குணமாகும்.

  • அகத்திக்கீரையை சூப் செய்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்ணில் நீர் வடிதல், கண் நோய் குணமாகும்.

  • ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண் நோய் குணமாகும்.

  • செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ இவற்றை அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு, சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ, கண் சிவப்பு குறையும்.

  • முருங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ண கண் எரிச்சல், வாய் நீர் ஊறல், வாய்க் கசப்பு குணமாகும்.

  • காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர கண் எரிச்சல் குணமாகும்.

  • உணவுடன் முள்ளங்கிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்வலி, கண் எரிச்சல் குறையும்.

  • பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து, வெண்ணைய் சேர்த்து கடைந்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

  • அண்ணாசிப் பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.