Pages

Saturday 20 February 2016

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு, வயிற்று பொருமல் குணமாக பாட்டி வைத்தியம்

வயிற்று வலி குணமாக:


  • இஞ்சியை பிழிந்து, அதில் கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.

  • கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடித்து, நன்கு மென்று சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

  • முட்டையின் வெள்ளை கருவோடு, தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.

  • ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து, இடித்து தூள் செய்து, ஒரு குவளை மோரில் கலந்து சாப்பிட்டு வர, வயிற்று வலி குணமாகும்.

  • ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகும்.

வயிற்றுப்போக்கு & வயிற்றுக் கடுப்பு குணமாக:


  • மாதுளம் பழச்சுளைகளை, வேகவைத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு குணமாகும்.

  • தொட்டாச்சினுங்கி இலையை அரைத்து, ஒரு குவளை தயிருடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகினால், வயிற்றுக் கடுப்பு குறையும்.

  • இஞ்சியை பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.

  • ஒரு கையளவு அரசஇலைக் கொழுந்தை, ஒரு குவளை மோருடன் கலந்து, தினமும் காலை ஒரு முறை அருந்த வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

  • கோரைக் கிழங்கை தோல் நீக்கி, வேகவைத்து அந்நீரை வடித்து குழந்தைக்கு கொடுக்க, நாற்பட்ட வயிற்றுப்போக்கு நிற்கும்.

  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து காலையில் குடிக்க வயிற்று உபாதைகள் குறையும்.

  • சிறிதளவு அதிவிடயத்துடன், தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குறையும்.

  • ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு குணமாகும்.

  • வெள்ளை வெங்காயத்தை நேய்யில் வதக்கிச் சாப்பிட இரத்தப் பேதி, சீதப்பேதி, ஆசனக்கடுப்பு மூலரோகம் ஆகியவை தீரும்.

  • சர்க்கரை 10 கிராம், தேன் 2 மேசைக் கரண்டி கலந்து காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சீதபேதி குறையும்.

வயிற்று பொருமல் குறைய:


  • ஜவ்வரிசியை சாதம் போல வேக வைத்து, மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குறையும்.

  • ஒரு கையளவு ஓமத்துடன், 3 வெற்றிலை சேர்த்து, நன்றாக இடித்து பிழிந்து, தேன் சேர்த்து பருக, வயிற்று பொறுமல் குணமாகும்.

  • மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.

  • மஞ்சளை தணலில் சுட்டு, அந்த சாம்பலை தேனில் கலந்து தினமும் காலையில், ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.