Pages

Saturday 20 February 2016

விக்கல், வாந்தி நிற்க பாட்டி வைத்தியம்

வாந்தி நிற்க:


  • வேப்பம் பூவை வறுத்து, பொடி செய்து வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால், வாந்தி குறையும்.

  • அத்தி செடியின் பூவை, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வர, வாந்தி குறையும்.

  • கிராம்பை பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், வாந்தி குறையும்.

  • ஏலக்காய் 15, வால் மிளகு 15 மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தால் வாந்தி நிற்கும்.

  • துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுத்தால் உணவு பிடிக்காமை நீங்கி, வாந்தி நிற்கும்.

விக்கல் நிற்க:


  • விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி, 2 தேக்கரண்டி தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால், விக்கல் நிற்கும்.

  • கடுக்காய் தொலை மைய இடித்து தூள் செய்து, விக்கல் வரும்போது அரை தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட, விக்கல் மறையும்.

  • விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து, 1 தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டால், விக்கல் குறையும்.

  • சீரகம், திப்பிலி சேர்த்து பொடி செய்து, தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.