Pages

Monday 15 February 2016

சுளுக்கு, வாயு தொல்லை குணமாக பாட்டி வைத்தியம்

சுளுக்கு குணமாக:


  • பிரண்டையை பிழிந்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய்ச்சி, சூடு குறைந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் பூச சுளுக்கு குணமாகும்.

  • தேங்காய் எண்ணையை காய வைத்து, அதில் கற்பூரத்தை போட்டு கலக்கி தேய்த்து வந்தால் சுளுக்கு குணமாகும்.

  • எலுமிச்சை இலைகளை எடுத்து வெண்ணைய் சேர்த்து நன்றாக அரைத்து, சுளுக்கு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், சுளுக்கு வலி குறையும்.

  • புளி, உப்பு இரண்டையும் அரைத்து கொதிக்க வைத்து, ஆறியவுடன் சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் சுளுக்கு குணமாகும்.

  • மஞ்சள், உப்பு, நல்லெண்ணெய் மூன்றையும் சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு குணமாகும்.

  • நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைத் துணியில் நனைத்து, சுளுக்கு உள்ள இடத்தின் மீது போட அல்லது சுற்ற, சுளுக்கு குணமாகும்.

வாயுத் தொல்லை குறைய:


  • ஆடதொடா இலையை அவித்து, தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க, வாயுத் தொல்லை குறையும்.

  • வேப்பம் பூவை காய வைத்து, பொடிசெய்து வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை குடிக்க, வாயுத் தொல்லை குறையும்.