Pages

Friday 12 February 2016

தலைவலி & தலைசுற்றல் குணமாக பாட்டி வைத்தியம்

தலைவலி குணமாக:


  • மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

  • உப்பு, மிளகு இரண்டையும் அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி, ஒரு பக்க தலைவலி நீங்கும்.

  • கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை மூன்றையும் நன்கு கலக்கி, நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குறையும்.

  • சந்தனத்தூளை எடுத்து, நீர் விட்டு குழைத்து நெற்றியில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

  • எட்டிமரக்கொழுந்து, மிளகு, பூண்டு மூன்றையும் நல்லெண்ணையில் கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து வர, ஒற்றை தலைவலி போகும்.

  • குப்பை மேனியை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தலைவலி உள்ள இடத்தில் தடவ தலைவலி குணமாகும்.

  • ஏலக்காய், கிராம்பு, வெற்றிலைக் காம்பு ஆகியவைகளை பால் விட்டு அரைத்து, சூடாக்கி நெற்றியில் பத்து போட்டால் தலைவலி விலகும்.

  • தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதானி இலைகளை அரைத்து, நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.

  • ஒற்றைத் தலைவலி, தாங்க முடியாத தலைவலிகளுக்கு பூண்டை அரைத்து, அதில் சிறிதளவு மட்டும் எடுத்து தடவினால் வலி குறையும்.

  • ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்து வந்தால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

  • மகிழம் பூவை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி அடிக்கடி குடிக்க தலைவலி, தலை சம்பந்தமான நோய் குணமாகும்.

  • நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

  • கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை பாரமாக இருத்தல் விலகும்.

தலைசுற்றல் குணமாக:


  • இஞ்சியை துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல், பசியின்மை நீங்கும்.

  • அகத்திக்கீரையை மதிய உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் வாந்தி, தலைசுற்றல், பித்தம் ஆகியவை குறையும்.