Pages

Tuesday 16 February 2016

தொண்டை பிரச்சனைகள் குணமாக பாட்டி வைத்தியம்

  • பசும்பாலில் சிறிதளவு ஓமம் போட்டு காய்ச்சி, அடிக்கடி காலை வேளையில் குடித்து வர தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.

  • தும்பை பூவை தினமும் வாயில் போட்டு, மென்று தின்று வந்தால் தொண்டைப்புண், தொண்டை வலி குணமாகும்.

  • எலுமிச்சம் பழச்சாறுடன், தேன் சேர்த்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை எரிச்சல் குணமாகும்.

  • அக்கரகாரம் வேரை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி, காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

  • சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை பொடி செய்து, பாலில் கலந்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வர தொண்டை வலி குறையும்.

  • பாலுடன் மஞ்சள் போட்டு காய்ச்சி காலை, மாலை தினமும் குடிக்க தொண்டை வலி குறையும்.

  • சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்து, இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப்புண் ஆறும்.

  • பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை சேர்த்து கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர, தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.

  • சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றை பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.

  • அண்ணாச்சி பூவின் பொடியை பாலில் போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

  • தூதுவளை கீரையை அடிக்கடி சாப்பிட்டால் சளி, தொண்டை வலி, தொண்டை எரிச்சல் சம்பந்தப்பட்ட நோய் குணமாகும்.