Pages

Monday 15 February 2016

சளி விரைவில் குணமாக பாட்டி வைத்தியம்

  • ஏலக்காயை போடி செய்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி விரைவில் நீங்கும்.

  • முருங்கைக்காய் நசுக்கி சாரெடுத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாபிட்டால், சளி நீங்கும்.

  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி மிதமான சூட்டில் நெஞ்சில் தினமும் தடவி வர நெஞ்சு சளி குறையும்.

  • சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் சிறு துண்டு கற்பூரம் சேர்த்து சுடவைத்து குழந்தையின் நெஞ்சில் தடவ மார்பு சளி குணமாகும்.

  • திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு, மிளகு, வீப்பங்கொழுந்து சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து மாத்திரையாக்கி சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.

  • ஆடாதொடா இலை, துளசி, வெற்றிலை, தூதுவளை அரைத்து பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.

  • வெள்ளை பூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலியை வெந்நீரில் அரைத்து குடித்தால் சளி குறையும்.

  • புதினா இலைச்சாறுடன் எழுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

  • மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் சளி குறையும்.

  • தும்பை இலை, வெங்காயம் இவற்றை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க சளி குறையும்.

  • ஆப்பிள், இஞ்சி, எலுமிச்சைசாறு, வெள்ளைப்பூண்டு இவற்றை அரைத்து கொதிக்க வைத்து தேனுடன் சாப்பிட்டால் சளி, ஜீரணம், கொழுப்பை கட்டுப்படுத்தும்.

  • தூதுவளை கீரையை அடிக்கடி சாப்பிட்டால் சளி, தொண்டை வலி, தொண்டை எரிச்சல் சம்பந்தப்பட்ட நோய் குணமாகும்.

  • ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச் சளி குணமாகும்.

  • தூதுவளை இலையை வெண்ணெய் விட்டு வதக்கி காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சளி நீங்கி விடும்.